×

ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று 57வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தாளை முன்னிட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு பொது மக்கள், பல்வேறு நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், “அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,A.R.Rakuman. ,Chennai ,India ,AR Raghuman ,AR Rahuman ,A.R.Rakuman ,
× RELATED பத்மநாபபுரம் தொகுதி முன்னாள்...